1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified சனி, 27 மே 2023 (12:35 IST)

’மாமன்னன்’ ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: 5 நிமிட வீடியோவும் ரிலீஸ்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழா குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில் சற்றுமுன் பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
அந்த வீடியோவில் ஏஆர் ரகுமான் ஒரு பாடலை பாடியுள்ள காட்சிகள் உள்ளன. மேலும் ஜூன் 1ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை  ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
Edited by Mahendran