1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2016 (14:22 IST)

சூர்யாவை காதலிக்கும் மலர் டீச்சர் சாய் பல்லவி!

சூர்யாவை காதலிக்கும் மலர் டீச்சர் சாய் பல்லவி!

பிரேமம் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து தமிழ் மலையாளம் என இரு மாநில ரசிகர்களையும் தன் பக்கம் அள்ளிக்கொண்டவர் சாய் பல்லவி. இவரது பெயர் சாய் பல்லவி என்பதை மறந்து மலர் டீச்சர் என்றே அதிகமாக ரசிகர்கள் கூறுவர்.


 
 
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தனக்கு பிடித்த நடிகர் சூர்யா எனவும், அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
 
அதுமட்டுமல்லாமல், சூர்யா உடன் தான் நடிப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவரை ஒரு முறையாவது சந்தித்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் உங்கள் அபிமான மலர் டீச்சர்.