திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (13:09 IST)

‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ்

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில், ராகவா லாரன்ஸுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

 
தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்? என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது. விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என அந்த டைட்டிலுக்கு ஆசைப்படாதவர்கள் கிடையாது. சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருந்தாலும், கூட இருப்பவர்கள் ஏற்றிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். ராகவா லாரான்ஸும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார். 
 
அவர் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில்,  ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ் என்று வருகிறதாம். இத்தனைக்கும் ரஜினிக்கு மிக நெருக்கமானவர் லாரன்ஸ். அவர்  கூடவா இப்படி? என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள்.