வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: சனி, 13 மே 2017 (13:28 IST)

மகிமா நம்பியாரின் கிடுகிடு வளர்ச்சி

‘சாட்டை’ படத்தில் அறிமுகமான மகிமா நம்பியாரின் சினிமா வாழ்க்கை, தற்போது கிடுகிடுவென வளர்ச்சி அடைந்து  வருகிறது.

 
அன்பழகன் இயக்கிய ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மகிமா நம்பியார். அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும், ஒரு படம் கூட பெயர் சொல்லும்படி அமையவில்லை. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்த ‘குற்றம் 23’ படம்தான் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
 
இதனால், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அருள்நிதி ஜோடியாக ‘இரவுக்கு  ஆயிரம் கண்கள்’, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘ஐங்கரன்’, சசிகுமார் ஜோடியாக ‘கொடிவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாகவும் நடிக்கப் போகிறார் மகிமா நம்பியார்.