வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (10:53 IST)

பில்கேட்ஸை சந்தித்த நடிகர் மகேஷ் பாபு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. சமீபத்தில் அவரின் ‘சர்காரு வாரி பாட்டா’ திரைப்படம் ரிலீஸானது.

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து ஆக்‌ஷன் மசாலா படங்களைக் கொடுத்து வரும் மகேஷ் பாபுவின் பல படங்கள் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மைக்ரோசாஃப்ட் அதிபரும், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸை சந்தித்துள்ள அவர் “பில்கேட்ஸை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. உலகம் இதுவரை கண்ட தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர். மிகவும் தன்மையானவர். உத்வெகம் அளிக்கும் மனிதர்” எனக் கூறி ட்வீட் செய்துள்ளார்.