1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (12:49 IST)

பிரபாஸுக்கு வில்லனாகும் கன்னட நடிகர் மது குருசாமி !

பிரபல கன்னட நடிகர் மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.  

 
கன்னடத்தில் கேஜிஎஃப் படம் மூலமாக இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரசாத் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். சலார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியது. 
 
இதனைத்தொடர்ந்து, பிரபல கன்னட நடிகர் மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான முப்டி, வஜ்ரகயா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.