புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:04 IST)

மாதவன் வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்!

நடிகர் மாதவன் கரைபடிந்த பற்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழில் சாக்லேட் பாய் கதாநாயகனாக வலம் வந்தவர் மாதவன். அவர் நடித்த அலைபாயுதே, மின்னலே, ரன் மற்றும் தம்பி ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையவே, இந்தி சினிமாவில் கவனம் செலுக்த்தினார். அதன் பின்னர் பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இறுதிச் சுற்று என்ற வெற்றிப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

ஆனாலும் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ராக்கெட்ரி மற்றும் மாறா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் அடர்தாடியும் காரைப் படிந்த பற்களுடன் சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.