செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (13:29 IST)

வடிவேலு - பஹத் பாசில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த படத்தின் கதை நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி வரை நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர் மற்றும்  இளைஞர் ஒருவர் இணைந்து பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவம் தான் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு  ’மாரீசன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran