1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 17 மே 2023 (12:46 IST)

மாநாடு படத்தின் கதையில் இவர்களும் பணிபுரிந்துள்ளார்களா? லேட்டா வந்த தகவல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது மாநாடு படத்தின் கதை இலாகாவில் சிம்பு உள்ளிட்ட வேறு சிலரும் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. படத்தின் கதையை சிம்பு படித்து பார்த்து அதில சில மாற்றங்களை செய்ததாக சொல்லப்படுகிறது. அது போல விஜய்காந்த் படங்களில் கதாசிரியராக பணியாற்றிய லியாகத் அலிகான் படத்தின் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.