1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (08:44 IST)

மாமன்னன் படத்தில் என் வேடம் இதுதான்… ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்திற்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார். விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் “நான் படத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக நடித்துள்ளேன். வித்தியாசமான படமாக எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். உதயநிதி மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியான அனுபவம். ஆனால் படம் சீரியஸாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.