1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (09:18 IST)

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு… தமிழக முதல்வர் இரங்கல்!

திரைப்பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் ‘ பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.