வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:43 IST)

இயக்குனர் ஷங்கர் படம் இயக்க தடை விதிக்க முடியாது! – லைகாவுக்கு நீதிமன்றம் பதில்!

இயக்குனர் ஷங்கர் தங்கள் நிறுவன படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்கக்கூடாது என லைகா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட க்ரேன் விபத்து, தொடர்ந்து வந்த கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் படப்பிடிப்பு பணிகள் தள்ளிக்கொண்டே சென்றன.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் 80% முடிந்துள்ளதாகவும், 150 கோடி பட்ஜெட் போடப்பட்ட நிலையில் இதுவரை 236 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஷங்கருக்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் 14 கோடி கொடுத்துள்ளதாகவும், மீத தொகையை தரவும் தயாராக இருப்பதாகவும், தங்கள் நிறுவன படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க நடிகர் ஷங்கருக்கு தடை விதிக்கவும் லைகா கேட்டுகொண்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஷங்கர் வேறு படம் இயக்க தடை விதிக்க முடியாது என்றும், அதேசமயம் இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15க்கு ஒத்தி வைத்துள்ளனர்.