1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (11:56 IST)

ஸ்ரீதேவியின் மாம் படத்தை பார்த்து வியந்த மகள் ஜான்வி!

ஸ்ரீதேவி தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் ‘மாம்’என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தை ஜுலை மாதம் 7-ம் தேதி பட வெளியிட தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர்   திட்டமிட்டுள்ளார்.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என வெளியிட திட்டமிட்டுள்ளனர். 4 மொழிகளுக்கும் ஸ்ரீதேவி டப்பிங் பேசுவதாக தெரிகிறது. ரவி உத்யவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இது ஸ்ரீதேவியின் 300வது படம்  ஆகும். ஸ்ரீதேவி நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ள 'மாம்' படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தை தன் மகள் ஜான்விக்கு திரையிட்டு காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. படத்தை பார்த்து முடித்த ஜான்வி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஸ்ரீதேவியை  கட்டியணைத்து கொண்டாராம்.
 
ஸ்ரீதேவி மகள் ஜான்வி விரைவில் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.