1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (16:33 IST)

தளபதி 67 நீங்கதான் இயக்கப் போறீங்களா? லோகேஷ் கனகராஜின் பதில்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜும், விஜய் 68 படத்தை அட்லியும் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் குதிரைவால் படத்தின் சிறப்புக்காட்சிக்கு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘தளபதி 67 படத்தை நீங்கள்தான் இயக்கபோவதாக செய்திகள் வெளியாகின்றனவே?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. அதை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.