1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:05 IST)

லாரன்ஸ் & நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிப்பது யார்? திடீரென்று நடந்த மாற்றம்!

மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களை லாரன்ஸ் முடித்ததும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முதலில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களால் படத்தை தொடர முடியாத நிலையில், அந்த படத்தை லோகேஷ், விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் மற்றும் பேஷன் ஸ்டுடியொஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.