லியோ 2 கண்டிப்பாக வரும்… இயக்குனர் லோகேஷ் கொடுத்த அப்டேட்!
கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. அதற்குக் காரணம் மிகவும் திராபையாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகம்தான். இந்நிலையில் அதை சமாளிக்க ரிலீஸூக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் சொல்லப்பட்ட பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறிவருகிறார். ஆனால் அதையும் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கூட ஒரு மேடையில் இந்த படத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் காமிக் கான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் லியோ 2 உருவாக சாத்தியங்கள் உள்ளது எனப் பேசியுள்ளார். இது சம்மந்தமாக “லியோ 2 உருவாக அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதற்கான நேரம் அமையவேண்டும். விஜய் அண்ணாவோடு ஒரு திட்டம் உள்ளது” எனப் பேசியுள்ளார்.