கடைசியாக அரசியல் படத்தில் நடிக்கிறாரா ரஜினி?
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். தற்போது ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், ரஜினி அடுத்ததாக அரசியல் சம்பந்தப்பட்ட படமொன்றில் நடிக்க இருப்பதாக கோலிவுட் பரவலாக பேசப்படுகிறது.
அரசியல் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தையும் பா.இரஞ்சித், ஷங்கர் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கக் கூடும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.