புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (09:57 IST)

ரசிகன் கேட்டதற்காக ஹாட் புகைப்படத்தை அனுப்பிய லட்சுமி மேனன் - அதுக்குன்னு இப்படியா அனுப்புறது?

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி , குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.


இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டர். இந்த கொரோனா ஊரடங்கில் உடல் எடை குறைத்து அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இரண்டாவது இன்னிங்ஸிற்கு பக்காவாக ரெடியாகிவிட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லட்சுமி மேனனிடம் ரசிகர் ஒருவர், உங்களது ஹாட் போட்டோ அனுப்புங்கள் என கேட்டார்? அதனை கிண்டலடிக்கும் விதமாக ரிப்ளை செய்துள்ள லட்சுமி மேனன், குண்டு ஆயா டான்ஸ் ஆடும் ஸ்டிக்கர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.