திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)

இதிலாவது தேறுவாரா லட்சுமி மேனன்?

கெளதம் கார்த்திக் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்த ‘சிப்பாய்’ படம், தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.




சரவணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சிப்பாய்’. இந்தப் படத்தில் லட்சுமி மேனன், விபா நடராஜன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஜிவிஜி ராஜு, இந்தப் படத்தைத் தயாரித்தார். சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், பைனான்ஸ் பிரச்னையால் பாதியிலேயே நின்றது. கெளதம் கார்த்திக் நடித்த படங்களும் வரிசையாக தோல்வியைத் தழுவியதால், அந்தப் படத்தை சீண்ட ஆள் இல்லை. ஆனால், சமீபத்தில் கெளதம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’ படம் நன்றாக ஓடியதால், ‘சிப்பாய்’ படத்தைத் தூசி தட்டி எடுத்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தணிகைவேல், படத்தை வாங்கியுள்ளார். 90 சதவீத காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி, க்ளைமாக்ஸுக்கு முந்தைய போர்ஷன் ஆகியவற்றை மட்டும்தான் எடுக்க வேண்டுமாம். மிஞ்சி மிஞ்சி போனால், 15 நாட்கள் ஷூட்டிங் நடந்தால் போதும். கெளதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.