1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (10:24 IST)

திரைக்கு வருகிறது குற்றம் கடிதல்

தேசிய அளவில் கவனம் பெற்ற குற்றம் கடிதல் திரைப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.


 
தமிழில் சமீபத்தில் தயாரான இரு படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு விருதுகளும் பெற்று வருகிறது. அவை காக்கா முட்டை மற்றும் குற்றம் கடிதல். இதில் காக்கா முட்டையை வெற்றிமாறனும், தனுஷும் விருதுக்கென்றே தயாரித்ததால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதேபோல் குற்றம் கடிதலும் இன்னும் திரைக்கு வராமலே தேசிய விருதை வென்றது.
 
குற்றம் கடிதல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், வருகிற மே மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இந்தத் தகவலை படத்தின் இயக்குனர் பிரம்மா தெரிவித்தார்.