ஆவியாகிப்போன அரசியல் கனவு… மீண்டும் சினிமாவுக்கே வந்த குஷ்பு

cauveri manickam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:47 IST)
அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாததால், மறுபடியும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் குஷ்பு. 
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, ஒருகட்டத்தில் அரசியலில் சேர்ந்தார். இதனால், 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவிட்டு, அவ்வப்போது சில படங்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார். அத்துடன், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ‘நந்தினி’ சீரியலிலும் நடித்து வந்தார்.

தி.மு.க.வில் இருந்த குஷ்பு, காங்கிரஸால் ஈர்க்கப்பட்டு அந்தக் கட்சிக்குத் தாவினார். ஆனால், எந்தக் கட்சிக்குப் போனாலும் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. எனவே, மறுபடியும் சினிமாவில் முழுநேரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இசையமைப்பாளரும், இயக்குநருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கியுள்ள ‘ஓ அந்த நாட்கள்’ படத்தில் நடித்துள்ளார் குஷ்பு. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு குஷ்பு முழுவதுமாக நடித்துள்ள படம் இது. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ஊர்வசி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :