செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By மகேந்திரன்
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (11:34 IST)

குருதி ஆட்டம் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இப்போது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.