ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 மே 2022 (15:05 IST)

காத்து வாக்குல ரெண்டு காதல்… ஓடிடியில் எப்போது? வெளியான தகவல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருப்பதாகவும், காதல் காட்சிகளோ நகைச்சுவை காட்சிகளோ ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட வில்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் அளித்த படமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உதவி சமூகவலைதளப் பக்கத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் வெளியாகி 22 நாட்களுக்குள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.