1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (15:29 IST)

KRK ஆன காத்துவாக்குல ரெண்டு காதல்- வெளியான லேட்டஸ்ட் தகவல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிறமொழிகளுக்கான டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ப்ரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் “KRK” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக் கதாபாத்திரங்களான ‘காதிஜா, ராம்போ, கண்மணி ஆகிய பெயர்களின் ஆங்கில எழுத்துகளை தலைப்பாக வைத்துள்ளனர்.