புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:37 IST)

ஐசிசி ஒருநாள் தரவரிசை… அசைக்க முடியாத இடத்தில் கோலி!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ள நிலையில் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்திய அணி ஒருநாள் தொடர்களில் விளையாடவே இல்லை. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் விளையாட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்த மாதத்துக்கான ஒருநாள் பேட்ஸ்மேன்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் கோலியே முதல் இடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் ரோஹித் ஷர்மாவும், மூன்று முதல் ஐந்து வரையிலான இயங்களில் பாபர் ஆசம், ராஸ் டெய்லர், டூப்பிளசிஸ் ஆகியோரும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த பேர்ஸ்டோ முதன்முதலாக 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.