விமானப்படை சீருடையில் முத்தம் : பைட்டர் படத்திற்கு நோட்டீஸ் !
விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் பைட்டர் என்ற படத்திற்கு விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோசன் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்த படம் பைட்டர்.
இப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் இப்படத்திற்கு விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பைட்டர் இந்திப் படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், விமானப்படையை அவமதித்துவிட்டதாகக் கூறி, இதற்கு விளக்கம் கேட்டு, அசாமை சேர்ந்த விமானப்படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இப்படத்தின் இறுதியில், நடிகர் ஹிருத்திக் ரோசன், தீபிகா படுகோன் விமானப்படை சீருடையில் முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை என கூறப்படும் நிலையில், இதுகுறித்து இயக்குனர் சித்தார்த்தா ஆனந்த், 90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட சென்றதில்லை. இதனால், இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்? எனவே பைட்டர் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமல் போயிருக்கலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.