1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 8 மே 2017 (11:28 IST)

நீங்களும் பாகுபலியாக மாற வேண்டுமா?... வீடியோ பாருங்க

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல்,  இதுவரை  ரூ.1000 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


 

 
இந்நிலையில், பாகுபலி படம் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் ஏராளமாக உலா வருகிறது. எல்லாவற்றையும் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் பாகுபலி படத்தின் சில காட்சிகளையும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், சென்னை கிஸ்கிந்தா சார்பில், பாகுபலி படத்தை கலாய்த்து, ஒரு முழு நீள வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கிஸ்கிந்தாவை விளம்பரப்படுத்துவதற்கு இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருந்தாலும், ரசிக்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.