1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated: திங்கள், 1 ஜூன் 2020 (19:32 IST)

அந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக அதற்கு சம்மதித்தேன் - கிரண் ரதோட் பளீச்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் வின்னர் படத்தில் "எந்தன் உயிர் தோழியே" பிகினி உடை அணிந்தது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரண் " பிகினி அணிந்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி ஷாட்... பிகினி அணியச் சொல்லி என்னிடம் 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்... இருப்பினும் பிகினி அணிந்தபோது என் மனதில் பல கேள்விகள் எழுந்தன... பிகினி அணிவதில் பிரச்சனை இல்லை ஆனால் அந்த நேரம் என் எடையை பற்றித் தான் யோசனையாக இருந்தது...ஆனால் அந்த பாடலும், படமும் ஹிட்டானது. நான் அது போன்று நடித்து பல ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தேன் என்று எனக்கு தெரியும்...சொல்லப் போனால் இதை மீண்டும் பர்ஃபெக்டான சம்மர் பாடியுடன் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.