வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (16:39 IST)

ராம்சரண் படத்தில் கியாரா அத்வானிக்கு இவ்வளவு சம்பளமா?

நடிகை கியாரா அத்வானி முதல்முதலாக தென்னிந்திய படமொன்றில் நடிக்க உள்ளார்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அவருக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாம். வளர்ந்து வரும் நடிகையான அவருக்கு இவ்வளவு சம்பளமா என்று டோலிவுட்டே ஆச்சர்யத்தில் உள்ளதாம்.