கான்களின் சம்பளத்தை கேட்கும் நடிகர் பிராபாஸ்; அதிர்ச்சியில் டோலிவுட்!

Sasikala| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (15:37 IST)
நடிகர் பிரபாஸ் பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு உலகம் அறியும் நடிகராக பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் தனது சம்பளத்தை தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் டோலிவுட் ஆடிபோய்யுள்ளது.

 
தெலுங்கு சினிமா திரையுலகில் அறிமுகமான பிரபாஸ் இன்று தமிழ், இந்தி முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பிரபாஸ் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தனக்கும் வேண்டுமென கேட்கிறாராம். இதற்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், டோலிவுட்  தயாரிப்பாளர்கள் மட்டும் அதிர்ச்சியில் உள்ளனராம்.
 
பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் திடீரென சம்பளத்தை உயர்த்தியிருப்பது, அவரது கேரியருக்கு நல்லதல்ல எனவும்  டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :