ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:59 IST)

கே ஜி எஃப் பட நடிகருக்கு புற்றுநோய்… சிகிச்சைக்காக உதவி கேட்டு கோரிக்கை!

கேஜிஎஃப் 2 பாகங்களிலும் ராக்கியின் ஆலோசகராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் கன்னட நடிகர் ஹரிஷ் ராய்.

கே ஜி எஃப் 2 பாகங்களிலும் காசிம் காச்சா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரிஷ் ராய். படத்தில் இவர் ராக்கிக்கு கொடுக்கும் பில்டப் காட்சிகள் மற்றும் வசனங்கள் வெகு பிரபலம். இந்நிலையில் இப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இப்போது சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அதனால் செலவினங்கள் அதிகமாகி வருவதாகவும், தன்னிடம் போதிய பணம் இல்லாததால் நன்கொடை அளிக்க சொல்லியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.