வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (01:20 IST)

விஜய், சூர்யாவை அடுத்து விக்ரமுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' படங்களில் நடித்து கோலிவுட்டில் ராசியான நாயகி என்று பெயரெடுத்த கீர்த்திசுரேஷ் அடுத்து விஜய்யின் 'பைரவா' படத்தில் நடித்தார். தற்போது அவர் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.



 


அதுமட்டுமின்றி தெலுங்கில் பவன்கல்யாண் படத்திலும், சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் இணையும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

'சாமி 2' படத்தில் த்ரிஷா மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.