திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (11:44 IST)

அனுஷ்காவை ஓரம்கட்டிய ஷ்ரத்தா கபூர்

பிரபாஸின் அடுத்த படத்தில், அனுஷ்காவுக்குப் பதில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளார்.

 
 
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹு’. ‘பாகுபலி’யின் பிரமாண்ட வெற்றியால், இந்தப் படத்தைத்  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுக்கின்றனர். எனவே, மூன்று மொழிகளிலும்  தெரிந்தவரை ஹீரோயினாகப் போட முடிவெடுத்தனர்.
 
பாலிவுட் நடிகைகளைத்தான் மூன்று மொழிகளிலும் தெரியும் என்பதால், ஒவ்வொருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஒரு நடிகை கூட ஓகே சொல்லவில்லை. எனவே, மறுபடியும் அனுஷ்காவையே ஜோடியாக்க முடிவு செய்யப்பட்டது.  ஆனால், எடையைக் குறைத்த பின்னர்தான் நடிப்பேன் என அவர் தீவிரமாக இருப்பதால், ஷூட்டிங் இழுத்துக்கொண்டே  போனது.
 
இந்நிலையில், ஒருவழியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், பிரபாஸுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில்  வில்லனாக, ‘கத்தி’ படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.