"யுவனின் அட்டகாசமான இசையில் தெறிக்கவிடும் கழுகு 2 டீசர்" - ட்ரெண்டிங் வீடியோ!

Last Updated: வியாழன், 18 ஜூலை 2019 (13:37 IST)
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது. கதாநாயகனாக நடிகர் கிருஷ்ணா நடிக்க பிந்துமாதவி கதாநாயகியாக நடித்து படத்தை  மெகா ஹிட் அடித்தனர். 


 
அதனை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என பலரும் இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டு வந்தனர். தற்போது மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சத்யசிவா. 
 
படத்திலும் நடிகர் கிருஷ்ணா மீண்டும் ஹீரோவாக நடிக்க பிந்து மாதவியும் கதாநாயகியாக நடித்துள்ளார். திருப்பூர் பி.ஏ. கணேஷ் தயாரிக்கும் இப்படம், நகைச்சுவை திரில்லர் அடிப்படையில் உருவாகி வருகிறது. 
 
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்ததை அடுத்து தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :