காதல் கனிந்தது எப்படி? மனம் திறந்த கயல் ஆனந்தி !!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:32 IST)
கயல் ஆனந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார். 

 
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர் சில நாட்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் சாக்ரடீஸ் என்பவரை மணம் செய்துக் கொண்டார்.
 
இந்நிலையில் இது குறித்து கயல் ஆனந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் வாழ்நாள் முழுவதையும் நீங்கள் விரும்பும் ஒருவருடன் செலவழிக்க முடியும் என நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் போது, உங்கள் வாழ்நாள் முழுவதும் சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். 
பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்த பிறகு, ஒவ்வொரு கஷ்டத்தையும் ஒன்றாகச் சந்தித்த பிறகு, உலகத்தை நாம் வெல்ல முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே கடந்த ஜனவரி 7 ஆம் தேதி எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் முன்னிலையில் சாக்ரட்டீஸுடனான எனது திருமணம் நடந்தது. கொரோனாவால் அனைவரையும் அழைக்கப்படவில்லை என பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :