1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (14:30 IST)

பாலாவின் தாரை தப்பட்டையில் நடிக்கும் காவ்யா ஷா

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் காவ்யா ஷா தமிழில் பாலாவின் தாரை தப்பட்டை மூலம் அறிமுகமாகிறார். 













தாரை தப்பட்டை கரகாட்ட கலையை மையமாகக் கொண்ட கதை. இதில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கின்றனர். வரலட்சுமிக்கு பாலியல் தொழிலாளி வேடம் என்றும், சசிகுமார் நாகஸ்வர கலைஞராக வருகிறார் எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இவர்களுடன் காவ்யா ஷாவும் நடிக்கிறார்.
 
தாரை தப்பட்டையில் காவ்யா ஷா கரகாட்ட கலைஞராக நடிப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
இளையராஜா இசையமைக்கும் தாரை தப்பட்டை அவரது ஆயிரமாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.