1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (18:45 IST)

’வாடிவாசல்’ படத்தின் உதவி இயக்குனராக பிரபல நடிகர்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரை படத்தில் உதவி இயக்குனராக பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். 
 
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் விடுதலை படத்தை முடிக்க உள்ளார். இதனை அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை விரைவில் அவர் தொடங்கவுள்ளார்
 
 இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இந்த படத்தில் உதவி இயக்குநராக இணைந்துள்ளார். இது பற்றிக் கூறியபோது கிராமிய பாடகராக வாழ்க்கையை தொடங்கிய நான் தமிழ் சினிமாவில் இனி முழு நேரமும் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதனால் வெற்றிமாறனுடன் உதவி இயக்குனராக இணைந்துள்ளேன். கடைசி வரை சினிமாவில் கற்றுக்கொள்வது தான் எனது எண்ணம் என்று கூறியுள்ளார்