1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (16:20 IST)

சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம்!

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் கிடைத்தது.

அதன் பின்னர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து இப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.