செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (21:01 IST)

சூர்யா -சுதா சுதாகொங்கரா பட சூப்பர் அப்டேட்! தாமதம் ஏன் தெரியுமா?

சூர்யா - சுதா கொங்கரா இணையும் அடுத்த படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
சூர்யா- சிறுத்தை சிவா இணைந்து பணியாற்றி வரும் படம் கங்குவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங்   முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில், கங்குவா படத் தயாரிப்பாளர்  ஒரு புதிய ஸ்டுடியோ திறந்துள்ளதாகவும், இந்த ஸ்டுடியோவை திறந்த பின் இதில் இப்படத்திற்கான டப்பிங் பேச நினைத்திருந்த காரணத்தால் சூர்யா- சுதா கொங்கரா இணையும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகிறது.
 
எனவே வரும் மார்ச் 1 ஆம் தேதி சுதா கொங்கரா- சூர்யா இணையும் அடுத்த படமான புறநானூறு படத்தின் ஷூட்டிங் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய சூரரைப் போற்று படம் சூப்பர் ஹிட்டாகி, விருதுகளை வென்ர நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரில் தொடங்கும என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.