யுடியூபில் வெளியானது கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம்!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த படம் பற்றி பிரபல பத்திரிக்கையில் எழுதிய தாணு “ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்” எனக் கூறியிருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர். இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரி ரிலீஸில் நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் படத்தின் சீரிய காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தை தன்னுடைய யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் 2 மணிநேரம் ஒரு நிமிடம் ஓடும் விதமாக சுருக்கப்பட்டுள்ளது.