1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (13:39 IST)

ஹைட்ரோ கார்பன் திட்டம்: நடிகர் கமல் சரமாரி ட்விட்!!

தமிழகத்தின் ஹாட் டாப்பிகான ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நடிகர் கமல் தன் பாணியிலேயே டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் தொடங்கியுள்ளது. இதில் ஈடுபடும் மாணவர்கள் அமைதியை காக்க வேண்டும். இந்த திட்டத்தின் கேடு குறித்து விவசாயிகளிடமும், மக்கள்டமும் பேசுங்கள்.
 
இயற்கை மக்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது, ஆனால் அது ஒரு தனி மனிதனின் பேராசைக்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.


 

 
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்ற கருத்தை நடிகர் கமல் தன் டுவிட்டர் பக்கத்தி தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுச்சேரியில் கொண்டுவர நினைத்தால் அதை தடுப்போம் என அம்மாநில முதல்வர் நாராயண சாமி தெரிவித்திருப்பதற்கு பாராட்டுகிறேன். வணங்குகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.