செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (11:14 IST)

நயன்தாரா அப்படி ஓரமா போமா ... பக்காவா பிளான் போட்டு ஸ்டார் நடிகையை லாக் செய்த கமல்!

மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். 
 
இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், கமல்ஹாசனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என இருந்தது. 
 
இதற்காக மணிரத்தினம் நயன்தாராவை ஹீரோயினா போட பேச்சுவார்த்தனை நடத்தினராம். ஆனால், கமல் நயன்தாராவை விட வேறு நல்ல நடிகை வேண்டுமென கூறி பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். 
 
பாலிவுட்டின் திறமையான நடிகையான வித்யாபான் ஏனோ தானோ என்று கதைகளை தேர்ந்தெடுக்க மாட்டார். அவரது நடிப்பும் ரோலும் ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக பேசப்படும். எனவே இப்படம் வேற லெவலில் இருக்கும் என நம்ப முடிகிறது.