1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (13:11 IST)

நமீதாவை டென்ஷனாக்கிய நடிகர் கமல்!

நமீதாவை டென்ஷனாக்கிய நடிகர் கமல்!

பாலிவுட் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழில் நடிகர் கமலஹாசனை வைத்து தொடங்கியுள்ளது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நேற்று ஆரம்பித்தது.


 
 
இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்துகொள்வார் என்று தான் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் சஸ்பென்ஸாக நடிகை நமீதா 15-வது நபராக இதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் கமலின் பேச்சால் நடிகை நமீதா டென்ஷன் ஆனார்.
 
நடிகர் கமல் நமீதாவை நிகழ்ச்சிக்கு வரவேற்று அவரிடம் பேசும் போது சமீப காலமாக ஆன்மீகத்தில் நமீதா அதிக ஈடுபாடு கொண்டுள்ளது குறித்து கேட்டார். அப்போது கடவுளிடம் பேசுவீர்களாக என்றார். அதற்கு நமீதாவும் ஆமாம் என்று பதில் அளித்தார்.
 
அடுத்ததாக பேசிய நடிகர் கமல், கடவுளிடம் நாம் பேசினால் பக்தி, கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம் என கூறி சிரித்தார். கமலின் இந்த கருத்தால் டென்ஷன் ஆகிய நமீதா, அதனை மறுத்து சமாளிக்கும் விதமாக சிரித்தார்.
 
நடிகர் கமல் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து கூறி நீதிமன்ற வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.