1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2017 (13:41 IST)

கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் மறைவு: திரையுலகம் அதிர்ச்சி

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார்.


 

சந்திரஹாசன் [வயது 82] ’ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் இல்லத்தில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.