1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (13:24 IST)

தோல்வி படத்தை டிஜிட்டலில் வெளியிடும் தாணு

கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் 2000ம் ஆண்டில் வெளியான படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படம் பயங்கர எதிர்ப்பார்ப்பில் வெளியானது. ஆனால் ரசிகர்களை கவர தவறியது. இதனால் தாணு பலத்த நஷ்டத்தை சந்தித்தார். ஆளவந்தான் என்னை ஆழிக்கவந்தான் என்று பேட்டிகளில் கூறினார்.


இந்த நிலையில் இன்று தாணு வெளியிட்டுள்ள விளம்பரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆளவந்தான் படத்தை டிஜிட்டலில் வெளியிடும் விளம்பரம்தான் அது. இன்று ஆரம்பம் ஆகும் டிஜிட்டல் பணிகள் முடிந்து விரைவில் 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று விளம்பரம செய்துள்ளார்.


 

இப்படத்திற்கு செலவான தொகையின் தற்போதைய மதிப்பு ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.