1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 26 மே 2016 (13:23 IST)

கமல் நடத்திய திரைக்கதை பயிலரங்கம்

கமல் நடத்திய திரைக்கதை பயிலரங்கம்

சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்புக்காக கமலும், படக்குழுவினரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். 


 


தசாவதாரத்தில் வரும் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து எழுதப்பட்ட கதைதான் சபாஷ் நாயுடு. அதில் கமலின் உதவியாளராக ராகுராம் நடித்திருந்தார். சபாஷ் நாயுடுவில் அவருக்குப் பதில் பிரம்மானந்தத்தை கமல் ஒப்பந்தம் செய்துள்ளார். கமலின் மூத்த மகள் ஸ்ருதி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
சபாஷ் நாயுடு படத்தின் திரைக்கதை பயிலரங்கை கமல் நடித்தினார். படத்தின் திரைக்கதையை அனைவரும் படித்து புரிந்து கொள்வதற்காக நடந்த இந்த பயிலரங்கில் கமல், ஸ்ருதி, இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
சபாஷ் நாயுடு படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு யுஎஸ்ஸில் நடக்கிறது. இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.