1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (06:26 IST)

கவிக்கோ அப்துல்ரகுமான் தமிழுக்கு உரமாகி என்றும் வாழ்வார்: கமல் இரங்கல்

பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல்ரகுமான் நேற்று மரணம் அடைந்த நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள் உள்பட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் இரண்டு முன்னனி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி அப்துல்ரகுமான் மறைவிற்கு தங்களுடைய இரங்கலை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.



 


உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில், '"அப்துல் ரகுமான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தே தீருவர்" என்று கூறினார்

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில், ' "மதிப்பிற்குரிய கவிக்கோ அப்துல் ரகுமான், ஒரு சிறந்த எழுந்தாளர், அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.