1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (22:26 IST)

மெர்சல்' ஆடியோ விழாவில் கமல்-ரஜினி? மும்மூர்த்திகளின் அரசியல் தொடக்கமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகிய மூவருமே அரசியல் மீது ஒரு கண் வைத்துள்ளனர். இவர்களில் ஒருவரோ அல்லது மூவருமோ விரைவில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது.



 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளவுள்ளதாக வெகுவேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதுமட்டுமின்றி மூவரும் இணைந்து அரசியல் களம் புகுவது குறித்த மறைமுக அறிவிப்பும் இந்த விழாவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த செய்தியை 'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார். இருப்பினும் ரஜினி, கமல் கலந்து கொள்வது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாகவும், கண்டிப்பாக 20வது தேதி ஒரு இன்ப அதிர்ச்சி தமிழக மக்களுக்கு காத்திருப்பதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.