திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (08:21 IST)

முதல் காட்சி முடியும் முன்பே நெகட்டிவ் விமர்சனங்கள்.. தேறுமா ‘கல்கி 2898 ஏடி திரைப்படம்?

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹீரோ பிரபாஸ் என்று இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டாலும் இந்த படத்தில் முதல் பாதியில் அவர் சில நிமிடங்கள் மட்டுமே  வருவதாகவும் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளாரா என்ற எண்ணம் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது என்றும் படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 
 
மேலும் ஆரம்பத்தில் உள்ள ஆன்மீக காட்சிகள், கமல்ஹாசன் காட்சிகள், இன்டர்வல் காட்சிகள், மற்றும் இரண்டாம் பாகத்திற்கான லீடு காட்சிகள் ஆகியவை அசத்தலாக இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
ஆனால் ஆன்மீகம் மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஆன்மிக காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும் அறிவியல் காட்சிகள் சொதப்பபட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் படம் ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் சுமாரான படம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva