1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 28 மே 2017 (22:25 IST)

ரஜினியின் 'காலா கரிகாலன்' படத்தின் ஸ்டார்கள்: முழுவிபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



 


ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவிகேலா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திர்பாதி, மிகி மிஜூரா, மேஜர் பிக்ரம்ஜீத், அருள்தாஸ், அரவிந்த ஆகாஷ், 'வத்திக்குச்சி' தீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதீஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர் மற்றும் ராஜ்மதன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்றும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.